ஆஸ்திரேலியாவின் கனவு உலக கோப்பை அணி.! கேப்டனாக யார் தெரியுமா.?

Cricket Australias team

இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், 45 லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. இதில் இந்திய அணி 9 போட்டிகளிலேயுமே வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடம் பிடித்து, முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது

தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3வது இடத்திலும், நியூசிலாந்து 4வது இடத்திலும் உள்ளது. இந்த லீக்ப் போட்டிகளைத் தொடர்ந்து அரையிறுதி போட்டியானது நாளைத் தொடங்கவுள்ளது. இதில் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.

நாளை மறுநாள் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடுகின்றன. இந்த நிலையில் லீக் ஆட்டங்களில் முடிவில் ஒவ்வொரு அணி வீரர்களின் ஆட்டத்தையும், திறமையையும் வைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 11 பேர் கொண்ட 2023 உலக கோப்பை அணியை உருவாக்கியுள்ளது.

அதில் ரசிகர்கள் யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மா, ஆஸ்திரேலிய அணி உருவாக்கிய அணியில் இடம்பெறவில்லை. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதே போல இந்திய அணியில் இருந்து 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதன்படி ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் உள்ளனர். இந்த அணியில் குயிண்டன் டீ காக் (W), டேவிட் வார்னர் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆவர். ரச்சின் ரவீந்திரா, ஐடன் மார்க்ரம், மார்கோ யான்சன் ஆகியோர் மிடில் ஆர்டரில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில் 12 வது வீரராக இலங்கையின் தில்சன் மதுசங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.

விராட் கோலியை கேப்டனாக தேர்வு செய்திருப்பதும் ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஏனென்றால் அவர் நடப்பு உலகக்கோப்பையில் 9 போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மொத்தமாக 594 ரன்கள் எடுத்துள்ள கோலி, 2 சதம் மற்றும் 5 அரைசதங்களை அடித்துள்ளார். குறிப்பாக, தனது பிறந்த நாளில் 49 வது சதத்தை பதித்த விராட், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.

ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணி

குயின்டன் டி காக் (W), டேவிட் வார்னர், ரச்சின் ரவீந்திரா, விராட் கோலி (C), ஐடன் மார்க்ரம், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஆடம் ஜம்பா, ஜஸ்பிரித் பும்ரா.

12வது வீரர்: தில்ஷான் மதுஷங்க

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்