மனைவியுடன் செம குத்தாட்டம் போடும் விராட் கோலி.! வைரலாகும் ‘க்யூட்’ வீடியோ.!!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் அடிக்கடி தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வேடிக்கையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட்கோலியுடன் ஜிம்மில் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வீடியோவில் ” அனுஷ்கா சர்மாவுக்கு இணையாக டான்ஸ் ஆட விராட்கோலி முற்பட்டபோது, எதிர்பார்தவிதமாக கால் வலியால் என்னால் முடியாது என்பது போல செல்கிறார். இதைக் கண்டு அனுஷ்கா அடக்க முடியாத சிரிப்பை வெளிப்படுத்துகிறார்.
இந்த வேடிக்கையான வீடியோவை பார்த்த ரசிகர்கள் ” அருமை” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், அனுஷ்கா சர்மா , கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பல வருடங்கள் காதலித்து வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இவர்களுக்கு 2021 ஜனவரியில் வாமிகா என்ற மகள் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.