சர்ச்சையான வைடு-பால் ! ” ரிவ்யூ செய்யும் வாய்ப்பு கேப்டன்களுக்கு வழங்க வேண்டும்”-விராட் கோலி

Default Image

“வைடு முடிவுகளில்  ரிவ்யூ செய்யும் வாய்ப்பு கேப்டன்களுக்கு வழங்க வேண்டும்” என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் பஞ்சாப் போட்டி : 

20 ஓவர் போட்டிகளை எடுத்துக்கொண்டால் நடுவரின் ஒரு சிறிய முடிவும் , பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.சில சமயங்களில் ஒரு அணியின் வெற்றி தோல்வி கூட மாறிவிடும்.20 ஓவர் போட்டியான ஐபிஎல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த மாதம் 20-ஆம் தேதி டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 157 ரன்கள் அடித்தது.இரண்டாவதாக களமிறங்கிய பஞ்சாப் அணியும் 157 ரன்கள் அடித்தது.இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.சூப்பர் ஓவரில்  டெல்லி அணி பஞ்சாப் அணி நிர்ணயித்த 3 ரன்களை அடித்து வெற்றிபெற்றது.

நடுவரின் தவறான முடிவால் பஞ்சாப் அணி தோல்வி : 

ஆனால் இரண்டாவதாக பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 19 ஓவரில் அகர்வால் மற்றும் ஜோர்டன் இரண்டு ரன்கள் ஓடினார்கள்.அந்த சமயத்தில் நடுவராக இருந்த நிதின் மேனன்  கிரீஸை சரியாக தொடாத காரணத்தால் ஒரு ரன் மட்டுமே வழங்கினார். ஆனால் இது தொடர்பான வீடியோவை ரீ -வைண்ட் செய்த போது பேட் கிரீஸை தொட்டது நன்கு தெரிந்தது.இதனால் ஆட்டத்தின் போக்கு மாறி டெல்லி அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.நடுவரின் இந்த முடிவை பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

முடிவை மாற்றிய நடுவர் :

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது.இந்த போட்டியின் நடுவே இரண்டாவதாக ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது.அப்போது ,பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்கூர், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஒரு தொடர்ந்து பந்து வீசிக் கொண்டிருந்தார் அவர் வீசிய பந்து ரஷீத் கான் பேட்டின் கீழ் சென்றது.
இதைப்பார்த்து, நடுவர் வைடு கொடுக்க கையைத் தூக்கிய போது தோனி இல்லை என்றதும் தனது முடிவை மாற்றினார்.ஆனால் நடுவரின் இந்த முடிவால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் கடும் அதிருப்தி அடைந்தார்.நடுவரின் இந்த முடிவும் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டது.

புதிய விதிகளை கொண்டு வர விராட் வலியுறுத்தல் :

இந்நிலையில் “வைடு முடிவுகளில் கேப்டன்களுக்கும் வாய்ப்பு வேண்டும்” என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் , ஐபிஎல் உள்ளிட்ட  போட்டிகளில் சிறு முடிவு  கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.ஆகவே நடுவர்களின் முடிவு திருப்தி அளிக்காத சமயங்களில் வைடு ,  இடுப்பு உயரத்துக்கு மேலாக வீசப்படும் புல்டாஸ்கள் ( waist height no ball) உள்ளிட்டவற்றை எதிர்த்து ரிவ்யூ செய்யும் வாய்ப்பு கேப்டன்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.இந்த புதிய விதிமுறையை 20 ஓவர் கிரிக்கெட்டில்  கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில்  ஏற்கனவே ‘ஆட்டோ நோ-பால்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்