விராட் கோலி ரிட்டையர் ஆக வேண்டும் – ஷாஹித் அப்ரிடி.!

Published by
Muthu Kumar

பாகிஸ்தான் அணியின் முன்னாள்  கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, விராட் கோலி தான் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ரிட்டையர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

விராட் கோலி கடந்த ஆசியக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார். விராட் இந்த ஆசியக் கோப்பை போட்டியில் மொத்தம் 5 போட்டிகளில் 276 ரன்கள் குவித்தார். அவர் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மொஹம்மது ரிஸ்வானை(281ரன்கள் 6 போட்டிகள்) அடுத்து 2ஆவது இடத்தில உள்ளார். அதில் அவரது முதல் டீ-20 செஞ்சுரியும் அடங்கும். மேலும் அது அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த விராட் கோஹ்லி யின் 71 ஆவது செஞ்சுரி ஆகும்.

இதற்கு முன் அவர் அடித்த செஞ்சுரி நவம்பர் 2019 இல் வந்தது. அதன் பிறகு மிகப்பெரிய ஸ்கோர்களை அடிக்க விராட் கோலி சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது பார்ம் பெரிதும் கேள்வியாகவே இருந்து வந்தது. தற்போது மீண்டும் அவர் 3 வருடங்களுக்கு பின் ஆசியக் கோப்பையில் அந்த 71 ஆவது செஞ்சுரியை அடித்துள்ளார்.

தற்போது 33 வயதான விராட் கோலி  ஆரம்ப கட்டத்தில் இந்த பெயரை அடைய சிறிது காலம் தேவைப்பட்டது. மேலும் விராட் கோலி, தோனி அணியில் இருந்து ரிட்டையர் ஆகும் முன்பே இந்திய அணியின் முகமாக இருந்து வருகிறார். விராட் கோலி தற்பொழுது கிட்டத்தட்ட 24,000 ரன்களுடன் பேட்டிங்கில் உச்சத்தில் உள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி விராட் கோலி தான் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ரிட்டையர் ஆக வேண்டும் என சமீபத்திய ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” விராட் கோலி பார்மில் இல்லாத போது அணியில் இருந்து நீக்கப்பட்டால் அது நன்றாக இருக்காது. நீங்கள் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே அது நிகழ வேண்டும். ஆசியாவைச் சேர்ந்த மிகச் சிலரே அந்த முடிவை எடுக்கின்றனர். விராட் அப்படிச் செய்யும் போது அவர் அதை ஸ்டைல் ஆக செய்வார், அனேகமாக அவர் தனது கிரிக்கெட் வாழ்கையை தொடங்கிய அதே முறையில் செய்வார். என்று உணர்கிறேன்” என கூறியுள்ளார்.

 

Published by
Muthu Kumar

Recent Posts

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

4 hours ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

5 hours ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

6 hours ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

6 hours ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

7 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

7 hours ago