விராட் கோலி ரிட்டையர் ஆக வேண்டும் – ஷாஹித் அப்ரிடி.!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, விராட் கோலி தான் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ரிட்டையர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி கடந்த ஆசியக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார். விராட் இந்த ஆசியக் கோப்பை போட்டியில் மொத்தம் 5 போட்டிகளில் 276 ரன்கள் குவித்தார். அவர் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மொஹம்மது ரிஸ்வானை(281ரன்கள் 6 போட்டிகள்) அடுத்து 2ஆவது இடத்தில உள்ளார். அதில் அவரது முதல் டீ-20 செஞ்சுரியும் அடங்கும். மேலும் அது அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த விராட் கோஹ்லி யின் 71 ஆவது செஞ்சுரி ஆகும்.
இதற்கு முன் அவர் அடித்த செஞ்சுரி நவம்பர் 2019 இல் வந்தது. அதன் பிறகு மிகப்பெரிய ஸ்கோர்களை அடிக்க விராட் கோலி சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது பார்ம் பெரிதும் கேள்வியாகவே இருந்து வந்தது. தற்போது மீண்டும் அவர் 3 வருடங்களுக்கு பின் ஆசியக் கோப்பையில் அந்த 71 ஆவது செஞ்சுரியை அடித்துள்ளார்.
தற்போது 33 வயதான விராட் கோலி ஆரம்ப கட்டத்தில் இந்த பெயரை அடைய சிறிது காலம் தேவைப்பட்டது. மேலும் விராட் கோலி, தோனி அணியில் இருந்து ரிட்டையர் ஆகும் முன்பே இந்திய அணியின் முகமாக இருந்து வருகிறார். விராட் கோலி தற்பொழுது கிட்டத்தட்ட 24,000 ரன்களுடன் பேட்டிங்கில் உச்சத்தில் உள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி விராட் கோலி தான் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ரிட்டையர் ஆக வேண்டும் என சமீபத்திய ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” விராட் கோலி பார்மில் இல்லாத போது அணியில் இருந்து நீக்கப்பட்டால் அது நன்றாக இருக்காது. நீங்கள் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே அது நிகழ வேண்டும். ஆசியாவைச் சேர்ந்த மிகச் சிலரே அந்த முடிவை எடுக்கின்றனர். விராட் அப்படிச் செய்யும் போது அவர் அதை ஸ்டைல் ஆக செய்வார், அனேகமாக அவர் தனது கிரிக்கெட் வாழ்கையை தொடங்கிய அதே முறையில் செய்வார். என்று உணர்கிறேன்” என கூறியுள்ளார்.