#IPL2021: மைதானத்தில் சிரித்து பேசிய கோலி-பண்ட்.. ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில், இந்த போட்டி முடிந்தபின் மைதானத்தில் இரு அணியின் கேப்டன்களும் சிரித்து பேசினார்கள்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22-ம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேற, 32 பந்துகளில் 55 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணி இருந்தது. அப்பொழுது பண்ட் – ஹெட்மயர் கூட்டணி அமைத்து ஆடினார்கள். இதில் அதிரடியாக ஆடிய ஹெட்மயர், 23 பந்துகளில் அரைசதம் விளாசினார். கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிபெற 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
அந்த ஓவரை சிராஜ் வீச, முதல் இரண்டு பந்துகளில் 1 ரன், மூன்றாம் பந்து டாட், நான்காம் பந்தில் இரண்டு ரன்கள் அடிக்க, ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து, 1 பந்தில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கிற்கு வந்தது. அந்த பந்தை எதிர்கொண்ட பண்ட், பவுண்டரி அடித்தார். இதனால் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை சந்தித்தது. கடைசிவரை போராடி தோல்வியை சந்தித்ததால், இருவரும் மைதானத்தில் சோகத்துடன் இருந்தனர்.
A range of emotions after that last-ball thriller! ☺️ ????#VIVOIPL | #DCvRCB | @DelhiCapitals | @RCBTweets pic.twitter.com/6wqKG5kbRw
— IndianPremierLeague (@IPL) April 27, 2021
அவர்கள் சோர்வுடன் இருப்பதை கண்ட கோலி, பண்டீடம் ஆறுதல் கூறி, உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் இருவரும் சிரித்து பேசிய விடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மைதானத்தில் அன்பை பரிமாறிய இந்த நிகழ்வை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து, அதனை பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சிறப்பாக விளையாடிய ஹெட்மயருக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார் கோலி. அவருடன் சிராஜும் இருந்தார்.