விராட் கோலி டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு! வெளியான தகவல்.!
விராட் கோலி, டி-20 போட்டிகளிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியானது.
அடுத்து வர இருக்கும் மிகப்பெரிய ஐசிசி தொடர்களான டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக டி-20 போட்டிகளிலிருந்து விராட் கோலி, தற்காலிகமாக ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விராட் கோலி, டி-20 போட்டிகளில் விளையாடும் தனது திட்டம் குறித்து அணியின் தேர்வுக்குழுவினரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை, இதனால் அவர் டி-20 போட்டிகளில் இருந்து, சிறிது பிரேக்(Break) எடுத்துக்கொள்வார் என்றும் ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இலங்கைக்கு எதிரான தொடரில் கே எல் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது விராட் கோலியும் டி-20 போட்டிகளில் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.
இதனால் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஹர்டிக் பாண்டியா அணிக்கு தலைமை வகிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.