டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் விராட் கோலி..!
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு.
விராட் கோலி அவர்கள் ஏற்கனவே, இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகியுள்ள நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும், இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாளாக பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பிசிசிஐக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் கேப்டன்பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
???????? pic.twitter.com/huBL6zZ7fZ
— Virat Kohli (@imVkohli) January 15, 2022