அதிவேக அரை சதம்.. அசத்திய இளம் வீரர்.! அசத்தல் ஆட்டம் என பாராட்டிய விராட் கோலி.!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்து அசத்திய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வாலை விராட் கோலி பாராட்டியுள்ளார்.
இந்தாண்டு ஐபில் தொடர் இன்னும் சில போட்டிகளில் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பெரும்பாலான அணிகள் பிளே ஆப் தகுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது என்பதால், அடுத்தடுத்த ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் என்பதால் போட்டி கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 150 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி தொடக்கமுதலே பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் விலாசி ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேக அரை சதம் படைத்த வீரர் என்ற பிரமாண்ட சாதனையை படைத்தார்.
ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 13 பவுண்டரிகள் என மொத்தமாக 98 ரன்கள் விளாசினார். கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு 29 பந்துகளில் 48 ரன்கள் விளாசி இருந்தார். இதனால் 13.1 ஓவரில் 151 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்று 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது .
அதிவேக அரை சதம் விளாசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரர் ஜெய்ஸ்வாலை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், பெங்களூரு அணி நட்சத்திர வீரருமான விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயஸ்வாலை வெகுவாக பாராட்டி உள்ளார். தான் இதுவரை பார்த்ததில் மிகவும் அசத்தலான ஆட்டங்களில் ஒன்று இது. எனவும், ஜெய்ஸ்வாலுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அதில் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.