இந்தியாவிற்காக அதிக ரன்கள் சாதனை ! சச்சினுக்கு அடுத்தபடியாக இடம்பிடித்த விராட் கோலி
விராட் கோலி, ராகுல் டிராவிட் ஐ பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவிற்கான அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.
நேற்று நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடிய 3 வது டி-20 போட்டியில் விராட் கோலி 63 ரன்கள் குவித்ததன் மூலம் 24,078 ரன்களுடன் இந்தியாவிற்கான அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கிறார்.
24,064 ரன்களுடன் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.சர்வதேச கிரிக்கெட்டில், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவிற்காக அதிக ரன்கள் (எல்லா நேரத்திலும்)
சச்சின் டெண்டுல்கர் – 664 போட்டிகளில் 34,357 ரன்கள்
விராட் கோலி – 471 போட்டிகளில் 24,078 ரன்கள்
ராகுல் டிராவிட் – 404 போட்டிகளில் 24,064 ரன்கள்
சவுரவ் கங்குலி – 421 போட்டிகளில் 18,433 ரன்கள்
எம்எஸ் தோனி – 535 போட்டிகளில் 17,092