ஐசிசி விருதுக்கு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்ட விராட் கோலி.!
விராட் கோலி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் இந்தியா சார்பில் ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதத்திலும் சிறந்து விளையாடும் வீரர்களுக்கு அந்த மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் விருதுக்கு இந்தியாவின் சார்பில் ஆடவர் அணிக்கு விராட் கோலியும், மகளிர் அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இக்கட்டான சூழ்நிலையில் தனது அற்புதமான ஆட்டத்தால் இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்த விராட் கோலி இந்திய ஆடவர் அணி சார்பில் பரிந்துரைக்கப்பட்டார், ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்படுவது கோலிக்கு முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவிற்காக இந்த உலகக்கோப்பையில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோரும் இந்த ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மகளிர் அணிசார்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ஆசியக்கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்திய அணி ஆசியக்கோப்பையை வெல்ல பெறும் பங்காற்றினார். இதனால் இவர்கள் இருவரும் மகளிர் சார்பில் அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணியின் நிடா தார், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற சிறப்பான பங்காற்றியதால் அவரும் ஐசிசி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.