அணி விட்டு வெளியேற ஒருபோதும் நினைத்ததில்லை- விராட் கோலி.!
விராட் கோலி சமீபத்தில் ஏபி டிவில்லியர்ஸ் உடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் மூலம் பேசுகையில் தான் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி விட்டு வெளியேற ஒரு போதும் நினைத்ததில்லை என்று கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நலனுக்கும் நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதனால் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் ஐபிஎல் போட்டியயை காண்பதற்கு காத்துள்ளார்கள் என்றே கூறலாம்.
இந்நிலையில் கடந்த ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வென்றுவிடும் என்று அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள், இந்நிலையில் இதுகுறித்து ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி சமீபத்தில் ஏபி டிவில்லியர்ஸ் உடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் மூலம் பேசினார்.
அதில் விராட் கோலி கூறியது நான் எப்பொழுதும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியை விட்டு வெளியேற நினைத்தது கூட இல்லை, மேலும் உண்மையாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று நான் அணியில் 12 வருடமாக இருக்கிறேன், எனது ஆசை அனைத்தும் கடுமையாக சிறப்பாக விளையாடி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.