கோப்பையை வெல்ல விராட் கோலி ஆர்சிபியை விட்டு வெளியேற வேண்டும் – கெவின் பீட்டர்சன் !!

Kevin Peterson about VK

சென்னை : விராட் கோலி கோப்பையை வெல்ல தகுதியானவர் என்று கெவின் பீட்டர்சன் ஸ்டார்ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

கடந்த மே-22ம் தேதி அன்று ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் பெங்களூரு அணி தோல்வியடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. ஐபிஎல் தொடரில் 17 முறை ஒரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முயற்சி செய்து 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு வந்தும் வெளியேறியுள்ளது. மேலும், 2 முறை இறுதி போட்டிக்கு வந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் தோல்வியடைந்துள்ளது.

அதிலும் பெங்களூரு அணியில் விராட் கோலி தனது அணிக்காக ஒவ்வொரூ முறையும், ஒவ்வொரு போட்டியிலும் முழு ஈடுபாடுடன் விளையாடுவார். ஆனாலும், அந்த அணிக்கும் ஐபிஎல் கோப்பைக்கும் ராசி இல்லாமலே இருந்து வருகிறது. தற்போது இதை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான் கெவின் பீட்டர்சன் நேற்றைய எலிமினேட்டர் போட்டியின் போது பேசி இருந்தார்.

அவர் இதனை பற்றி கூறுகையில், “நான் முன்பே சொன்னேன், மீண்டும் சொல்கிறேன் மற்ற விளையாட்டுகளில் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் பெருமை தேடுவதற்காக அணிகளை விட்டு வெளியேறுவார்கள். இங்கு விராட் கோலி கடினமாக முயற்சி செய்து ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார், அவர் இவ்வாறு செய்தும் ஆர்சிபி அணி மீண்டும் தோல்வியுற்றது. அவர் அணியில் இருந்து வெளியேறி வேறு அணியில் சென்று விளையாடலாம்.

உண்மையில் அது டெல்லி அணியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விராட் செல்ல வேண்டிய இடம் டெல்லி தான். அவருக்கு டெல்லியில் ஒரு வீடு உள்ளது என்பது எனக்குத் தெரியும். அங்கு அவருக்கு ஒரு இளம் குடும்பம் உள்ளது. அவர் டெல்லியில் அதிக நேரம் செலவிடுகிறார், அவர் டெல்லியில் பிறந்தவர் ..அவர் ஏன் டெல்லிக்கு செல்ல முடியாது?

விராட் நீண்ட நேரம் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். கால்பந்தில் நீங்கள் பாருங்கள் பெக்காம் அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு சென்றார், ரொனால்டோ வெளியேறி வேறு அணிக்கு சென்றார், மெஸ்ஸி வெளியேறி வேறு அணிக்கு சென்றார் அதே போல டெல்லி அணிக்கு கோலி செல்ல வேண்டும்”, என்று பீட்டர்சன் நேற்றைய ஐபிஎல் போட்டியின் ஸ்டார்ஸ்போர்ட்ஸில் கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்