கங்குலியை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி !
இந்திய அணி கடைசி லீக் போட்டியை இலங்கை அணியுடன் மோதியது.இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் கேப்டன் விராட் கோலி 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை நின்றார்.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் கோலி 8 போட்டிகளில் 442 ரன்கள் அடித்து உள்ளார். இதில் ஐந்து அரைசதங்கள் விளாசி உள்ளார்.விராட்கோலி இதுவரை 25 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய 1029 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் இந்திய வீரர்களில் உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு விராட் கோலி முன்னேறி உள்ளார். கங்குலி 21 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 1006 ரன்கள் எடுத்து உள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 44 போட்டிகளில் விளையாடி 2278 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலி 2000 ரன்களை தொடவே இன்னும் இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் விளையாட வேண்டும்.