தலைவா வா., தலைவா! ரோஹித் ஓகே! விராட்? மோசமான ஃபர்ம்-க்கு பதிலடி கொடுப்பாரா ‘கிங்’ கோலி?
இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த போட்டியில் ரோஹித் ஆடியது போல இந்த போட்டியில் தனது பழைய ஃபார்முக்கு திரும்பி ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. ஏற்கனவே டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-0 கணக்கில் கைப்பற்றி விட்டது.
3வது ஒருநாள் போட்டியில் தோல்வி கண்டாலும் இந்திய அணிக்கு பின்னடைவு இல்லை என்றாலும் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுதாக வென்று சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முழு உத்வேகத்துடன் செல்ல இந்திய அணி முயற்சி மேற்கொள்ளும். தொடர் தோல்விகளில் இருந்து மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்வதற்கு முன்னர் ஆறுதல் வெற்றியை அடைய இங்கிலாந்து அணியும் முயற்சிக்கும். இதனால் இன்றைய நாள் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய தூண்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஃபார்ம் பற்றிய கேள்விகள், விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், கடந்த போட்டியில் ரோஹித் அதற்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டார். ‘ நான் மீண்டும் பழைய ‘ஹிட்’மேனாக வந்துவிட்டேன் என கூறிவது போல அதிரடி காட்டிவிட்டார் ரோஹித் சர்மா. ஆனால், விராட் இன்னும் தனது ஃபார்ம் குறித்த விமர்சனத்திற்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருக்கிறார்.
அதற்கான பதிலை இன்று தனது பேட்டிங் மூலம் விராட் கோலி நிரூபிப்பார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றார். கிரிக்கெட் கடவுள் சச்சின் சாதனையை நெருங்கும் திறன் கொண்ட கோலி, பலமுறை இந்தியாவுக்காக அதிக ரன் குவித்தவர்கள் லிஸ்டில் முன்னிலையில் இருந்தாலும், தற்போதைய அவருடைய ஃபார்ம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலருக்கும் கவலை அளிக்கும் விதமாகவே உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்று பின்னர் உடற்தகுதி இல்லை என்பதால் அவருக்கு பதிலாக இளம் வீரர் ஹர்ஷத் ராணா அணியில் இடம்பெற்று இருப்பது சற்று பின்னடைவாக பார்க்கப்டுகிறது. அணியில் அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரரகள் லிஸ்டில் இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் உள்ளது. இன்றைய போட்டியில் விராட் மீண்டும் ‘கிங்’ கோலியாக உருவெடுக்க வேண்டும் என எதிர்பார்ப்போம்.