“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!
தற்போது சாம்பியன்ஸ் டிராபி விளையாடிய இந்திய அணி வீரர்கள் அடுத்த 10 வருடங்கள் நான்றாக விளையாட முடியும் என தனது ஓய்வு குறித்த மறைமுக கேள்விக்கு விராட் கோலி பதில் அளித்துள்ளார்.

துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025 சாம்பியன்ஸ் எனும் பட்டத்தை வென்ற குஷியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர். அதே நேரத்தில் , கடந்த 2024 டி20 உலகக்கோப்பை வென்ற பிறகு விராட், ரோஹித்தின் ‘திடீர்’ ஓய்வு முடிவு போல, தற்போது ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பு வெளியாகிவிடுமோ என அவர்களது ரசிகர்கள் பதட்டத்தில் இருந்தனர்.
ஆனால், ஓய்வு குறித்த அனுமானங்களுக்கு துளிகூட அசைந்து கொடுக்காமல் இப்போது இல்லை என்பதை வெளிப்படையாகவே இருவரும் அறிவித்து ரசிகர்கள் மனதில் பால்வாற்றிவிட்டார்கள். நேற்று இரவே கேப்டன் ரோஹித் சர்மா, வம்படியாக வந்து, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை. ஓய்வு என்ற கேள்விக்கே இப்போது இடமில்லை. எனது ஓய்வு குறித்து வதந்திகள் பரவிவிடக் கூடாது என்பதற்காக இதனை நான் இப்போது தெளிவுபடுத்துகிறேன் என கூறிவிட்டார்.
அடுத்து நம் விராட் கோலி. இவரது ஓய்வு என்பது இப்போது இருக்காது என்றே ரசிகர்கள் கருதினர். அதேபோலவே இவரது ‘நச்’ பதிலும் அமைந்தது. நேற்று போட்டி முடிந்ததும் வர்ணையாளர் ஓய்வு குறித்து மறைமுகமாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கையில், தற்போது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் அடுத்த 10 வருடம் வரை தொடர்ச்சியாக நான்றாக விளையாட முடியும். அந்த அளவுக்கு அனைத்து வீரர்களிடமும் ஆற்றம் இருக்கிறது. இதே போல அடுத்த 10 வருடங்கள் வரை விளையாடினால் இன்னும் நிறைய கோப்பைகளை குவிக்க முடியும் என கூறி இன்னும் 10 வருடங்கள் நான் விளையாடுவேன் என மறைமுகமாக பதில் அளித்துவிட்டார் ‘கிங்’ கோலி.
மேலும் , இளம் வீரர்களுடன் விளையாடியது புது அனுபவமாக இருந்தது. அவர்கள் உடன் விளையாடி எனது அனுபவத்தை அதிகரித்து கொள்ள விரும்புகிறேன். இப்போதுள்ள இளம் வீரர்களை பார்க்கும் போது இந்திய அணி நல்ல வீரர்கள் கையில் தான் இருக்கிறது என்று தோணுகிறது எனவும் கிங் கோலி கூறியுள்ளார்.