#INDvENG : முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விலகல்!

virat kohli test

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனுடைய முதல் போட்டி வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து  அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி  விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

தனிப்பட்ட சில காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்து தான் விலகுவதாகவும், அதற்கு தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) விராட் கோலி கோரிக்கை விடுத்துள்ளார்.

நான் தான் பும்ராவை விட சிறந்தவன்! 17 வயது தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் பேச்சு!

அவருடைய கோரிக்கையின் படி, பிசிசிஐ கோரிக்கையை ஏற்று அவருக்கு அனுமதி வழகியுள்ளது. விராட் கோலி தன்னுடைய நிலைமை பற்றியும் தனக்கு அவசர வேலை இருப்பதால் இரண்டு போட்டிகளில் தன்னால் விளையாட முடியாது அதனால் தான் விலகுவதாகவும் கேப்டன் ரோஹித் ஷர்மா, அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆகியோரிடமும் பேசி இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்த சமயத்தில் விராட் கோலியின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அவரது தனிப்பட்ட காரணங்களின் தன்மை குறித்து ஊகங்களைத் தவிர்க்குமாறும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இங்கிலாந்து  அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டி 25-ஆம் தேதி நடைபெறுகிறது, இரண்டு போட்டி பிப்ரவரி 2, மூன்றாவது போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதி, நான்காவது போட்டி பிப்ரவரி 23-ஆம் தேதி, ஐந்தாவது போட்டி மார்ச்  7-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்