சர்வதேச போட்டிகளில் சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி.!
இன்று இலங்கைக்கு எதிராக உள்நாட்டில் விராட் கோலி அடித்த சதத்தின் மூலம் சச்சினின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.
இந்தியா – இலங்கை இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று குவஹாத்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 373 ரன்கள் குவித்துள்ளது. இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி 87 பந்துகளில் 113 ரன்களை விளாசினார்.
இதன் மூலம், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனது 45ஆவது சதத்தை நிறைவு செய்தார் விராட் கோலி. மேலும், உள்நாட்டில் 20 சதங்கள் அடித்து சச்சின் வைத்திருந்த சாதனையை தற்போது கோலி சமன் செய்துள்ளார். இன்று குவஹாத்தியில் அடித்த சதமானது விராட் கோலியின் 20வது உள்நாட்டு சதமாகும்.