ஐசிசி டி-20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி, மீண்டும் டாப் 10க்குள் நுழைந்துள்ளார்.
மெல்போர்னில் கடந்த அக்-23 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர்-12 ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்திருந்தார்.
இந்த போட்டிக்கு பிறகு ஐசிசி வெளியிட்டுள்ள டி-20 தரவரிசைப்படி விராட் கோலி 5 இடங்கள் முன்னேறி 9ஆம் இடத்தில் இருக்கிறார். பாகிஸ்தானின் முஹம்மது ரிஸ்வான் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
நியூசிலாந்தின் டெவான் கான்வே 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியாவின் சூரியகுமார் யாதவ், 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பாபர் அசாம் 4 ஆவது இடத்திலும், எய்டன் மார்க்ரம் 5 ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…