#IPL 2021:டி 20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி சாதனை…!

Default Image

டி 20 கிரிக்கெட் வரலாற்றில் 10,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் நேற்று துபாய், சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடியது.இதில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி,முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் படிக்கல் களமிறங்கியனர். ஆனால், வந்த வேகத்தில் படிக்கல் டக் அவுட்டானார்.நிதானமாக விளையாடி வந்த கோலி 51 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.

இப்போட்டியில்,விராட் 13 ரன்கள் எடுத்தபோது 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் பெற்றுள்ளார்.மேலும், 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது சர்வதேச வீரரானார். அவர் இந்தியா, டெல்லி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை பிரதிநிதித்துவப்படுத்தி 314 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.மேலும்,இந்திய கேப்டன் இதுவரை 5 சதம் மற்றும் 73 அரைசதங்கள் அடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக,வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (14,275 ரன்), பொல்லார்டு (11,195 ரன்), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (10,808 ரன்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (10,019 ரன்) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.

நேற்று பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 165 ரன்களை எடுத்த நிலையில்,மும்பை அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 111 ரன்கள் எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்