இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 30 வயதிலேயே ஒரு லெஜண்ட்டாக மாறிவிட்டார் என்று அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் இந்திய அணியை வழிநடத்தியதற்காக விராட் கோலியை பாராட்டியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங் “டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India)” நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும்,இது குறித்து அவர் கூறியதாவது:
வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இந்திய கேப்டன்:
“உலக கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரராகக் கருதப்படும் கோலி,டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இந்திய கேப்டன் ஆவார்.கோலியின் தலைமையின் கீழ், டீம் இந்தியா,அனைத்து வடிவங்களிலும் ஒரு சக்தியாக மாறியுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கோலி தலைமையிலான அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
விராட் மற்றும் ரோஹித் இடையேயான போட்டி:
கடந்த 2008 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமானதிலிருந்து கோலி, பேட்டிங்கில் தனது முத்திரையை பதித்து வருகிறார்.அப்போது ரோஹித்துக்கும், கோலிக்கும் இடையே போட்டி இருந்த நிலையில்,போட்டிகளில் கோலி தொடர்ந்து ரன்களை சேர்த்துக்கொண்டே இருந்தார்.
அதன்காரணமாகவே, 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதன்மூலம்,அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் மாறியது.ஆனால்,இப்போது ஒப்பிடும்போது, அவரிடம் அதைவிட ஒரு முழுமையான மாற்றம் உள்ளது.
அவர் என் கண் முன்னே பயிற்சியளிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.கோலி ஒரு கடின உழைப்பாளி,அவர் மிகவும் ஒழுக்கமாக பயிற்சியை மேற்கொள்பவர்.மேலும்,அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக வரவேண்டும் என்ற எண்ணத்தில் அதற்காக கடுமையாக உழைக்கிறார்.
கோலி ஒரு லெஜண்ட்:
அதுமட்டுமல்லாமல்,எல்லாரும் ஓய்வு பெறும்போதுதான் லெஜண்ட் ஆக மாறுவார்கள்,ஆனால்,கோலி தனது 30 வயதிலேயே லெஜண்ட் ஆவதற்கான இடத்தை பிடித்துள்ளார்”,என்று புகழ்ந்துள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி இந்தியாவுக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7547 ரன்கள் எடுத்துள்ளார்.மேலும்,43 சதங்கள் மற்றும் 62 அரைசதங்களுடன், ஒருநாள் போட்டிகளில் (ODI) 12,169 ரன்கள் குவித்துள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் விரைவாக 18 ஆயிரம் ரன்களைக் கடந்தவர் என்ற சாதனைகளை வசப்படுத்தினார்.சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்.
விருதுகள்:
கோலி 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் (ODI) போட்டிக்கான விசுடன் விருது பெற்றார்.மேலும்,மத்திய அரசு இவர்க்கு அர்ஜூனா விருது வழங்கியது.2017 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது போன்றவற்றை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…