ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?
ஆஸ்திரேலிய அணியின் சாம் கான்ஸ்டாஸ் மீது மோதி அவருடன் விவாதத்தில் ஈடுபட்டார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இதுகுறித்து ரிக்கி பாண்டிங், மைக்கேல் வாகன விமர்சனம் செய்துள்ளனர்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இன்று மெல்போர்னில் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கமின்ஸ், பந்துவீச்சை தேர்வு செய்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து அறிமுக வீரராக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார்.
அறிமுக போட்டியிலேயே சிறப்பாக விளையாடி தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார் சாம் கான்ஸ்டாஸ். டெஸ்ட் போட்டியை, ஒருநாள் டி20 கிரிக்கெட் போட்டிகள் போல விளையாடி அசத்தி, 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார் சாம்.
இவர் விளையாடி கொண்டிருக்கும்போது, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடந்து செல்கையில், அவரது தோள்பட்டையை இடித்துச் சென்றார். இதனால், இருவருக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்கள், கள நடுவரும் அருகில் வந்து இந்த வாக்குவாதத்தை தடுத்து நிறுத்தினர்.
அறிமுக வீரர் உடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டது, மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் இது பேசுபொருளாக மாறியது.
இதுபற்றி வர்ணையார் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறுகையில், ” இதில் எந்த சந்தேகமும் இல்லை, விராட் கோலி எங்கு னது செல்கிறார் பாருங்கள்? விராட் கோலி, மைதானத்தின் முழு கவனத்தையும் அவர் பக்கம் நோக்கி செல்ல வைக்கிறார். நேராக சாம் கான்ஸ்டாஸிடம் சென்று ஒரு மோதலை தூண்டிவிட்டார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.” எனக்கூறினார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், ” இது கோலி பெருமைப்படக்கூடிய ஒரு விஷயம் அல்ல. சாம் கான்ஸ்டாஸை நோக்கி விராட் சென்று கொண்டிருக்கிறார். விரட்டை பாருங்கள், அவர்தான் திசை மாறி வருகிறார். விராட் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், அவர் அனுபவம் வாய்ந்தவர்.” கூறினார். மேலும், ” விராட் இதனை செய்யக்கூடியவர் தான்” என்றும் வாகன் வர்ணையில் கூறினார்.