சண்டை போட்ட விராட் கோலி…அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!

பாக்ஸிங் டே டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ்-உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வீரர் விராட் கோலிக்கு 20 % அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

virat kohli fight

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கமின்ஸ், பந்துவீச்சை தேர்வு செய்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து அறிமுக வீரராக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார்.

அறிமுக போட்டியிலேயே சிறப்பாக விளையாடி தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார் சாம் கான்ஸ்டாஸ்.  டெஸ்ட் போட்டியை, ஒருநாள் டி20 கிரிக்கெட் போட்டிகள் போல விளையாடி அசத்தி, 65 பந்துகளில் 60 ரன்கள் சாம்  எடுத்தார். இதனையடுத்து சில நேரத்தில் அவருக்கும் விராட்கோலிக்கும் இடையே திடீரென வாக்குவாதமும் ஏற்பட்டது.

போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆஸ்திரேலிய அணியிலிருந்து அறிமுக வீரராக  களமிறங்கி இருந்த சாம் -ஐ நோக்கி வேகமாக நடந்து சென்று தன்னுடைய தோள்பட்டையை வைத்து லேசாக இடித்தார். இதன் காரணமாக மைதானத்தில் இருவருக்கும் சிறிது நேரம் வாக்கு வாதமும் ஏற்பட்டது. உடனடியாக வாக்கு வாதம் பெரிதாக ஆகிவிடக்கூடாது என்பதால் சக வீரர்கள் மற்றும் நடுவர்கள் பிரச்சினையை முடித்து வைக்க முயற்சி செய்தார்கள்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், விராட் வேண்டுமென்ற இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டு மைதானத்தில் இருப்பவர்களின் கவனத்தை தன்னுடைய மீது திருப்புகிறார் என அவர் மீது தான் தவறு உள்ளது என பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் இதில் கோலி மீதுதான் தவறு எனவும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ” விராட் கோலி தான் திசை மாறி வேண்டுமென்றே அந்த திசைக்கு செல்கிறார்” என பேசியிருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது போட்டியில் விதிகளை மீறி போட்டியாளருடன் வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால் ஐசிசி விராட் கோலிக்கு அதிரடியான அபராதம் விதித்துள்ளது. ஐசிசி நடத்தை விதிகளில் உள்ள 2.12 என்ற விதி முறைகள் படி வீரர்கள் விதிகளை மீறி நடத்துவிட்டார்கள் என்றால் போட்டிகட்டணத்தில் இருந்து 20 % அபராதம் விதிக்கப்படும்.

எனவே, விராட் கோலியும் அப்படியான சம்பவத்தில் ஈடுபட்ட காரணத்தால் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 % பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு டீமெரிட் புள்ளிகாலும் வழங்கப்பட்டது. மேலும், 24 மாத காலத்தில் ஒரு வீரர் நான்கு டீமெரிட் புள்ளிகள் பெற்றிருந்தார் என்றால் ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு குறைந்த ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்