கே.எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமண பரிசாக பிஎம்டபிள்யூ காரை, விராட் கோலி அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் மற்றும் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டி இருவருமே வெகு காலமாக காதலித்து வந்த நிலையில் அவர்களின் திருமணம் ஜனவரி 23 அன்று கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. ராகுல்-அதியா ஷெட்டி திருமணவிழாவில் இருவருக்கும் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
புதுமணத் தம்பதிகளுக்கு திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் நண்பர்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ராகுல்-அதியா ஷெட்டி ஜோடிக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பரிசுகளைப் பெறுவது வழக்கம் என்றாலும், விராட் கோலி, சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப், எம்எஸ் தோனி மற்றும் பலர் அவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பரிசாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
சுனில் ஷெட்டி அவர்களுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான எம்எஸ் தோனி அவர்களுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸகி நிஞ்சா மோட்டார்சைக்கிளும், விராட் கோலி, புதுமண தம்பதிக்கு ரூ.2.17 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரையும் பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…