Virat Kohli நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் விராட் கோலி நடனம் ஆடி சென்னை ரசிகர்களை மகிழ்வித்தார். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பும், சரி போட்டிகள் நடந்துகொண்டிருக்கும் போதும் சரி விராட் கோலி நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துவிடுவார்.
அப்படி தான் நேற்று சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிக்கு முன்னதாக மைதானத்தில் நின்று கொண்டிருந்த போது நடனம் ஆடி கவனத்தை ஈர்த்தார். போட்டி தொடங்குவதற்கு முன்பு சேப்பாக் மைதானத்தில் ரசிகர்களுக்காக பாடல்கள் போடப்பட்டு வந்தது. அப்போது விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் இடம்பெற்று இருந்த அப்படி போடு பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனை கேட்ட ரசிகர்களும் மைதானத்தில் நடனம் ஆடிக்கொண்டு வந்தார்கள். அப்போது பாடலை கேட்டுவிட்டு மைதானத்தில் விராட் கோலியும் நடனம் ஆடினார். அவர் நடனமாடிய வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் விராட் கோலி நல்ல குதூகலமாக இருக்காரு” என கூறி வருகிறார்கள்.
மேலும், நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி 18.4ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் விராட் கோலி 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…