t20 world cup 2024 pakistan virat [file image]
டி20 உலகக்கோப்பை : அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகாணங்களில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ள நிலையில், இது பற்றி அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரஷீத் லத்தீப் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகக்கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது எங்களுக்கு சற்று வருத்தமாக தான் இருக்கிறது.
அதற்காக எல்லா விஷயங்களுக்கும் பாகிஸ்தான் வீரர்களைக் குறை கூற முடியாது. என்னை பொறுத்தவரை வீரர்கள் அனைவரும் நன்றாக தங்களால் முடிந்த அளவுக்கு போராடினார்கள்.ஆனால், விளையாடிய ஆடுகளத்தின் நிலைமைகளால் தான் தடுமாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் இந்தியா இரண்டு அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். போட்டியின் நிலை வேறு மாதிரி மாறிவிட்டது.
இது அனைத்திற்கும் காரணமே ஆடுகளத்தின் நிலைமை என்று மட்டும் தான் நான் கூறுவேன். விராட் கோலி பெரிய அளவில் ரன்களை எடுக்கவில்லை. விராட் கோலி மட்டுமில்லை அவரை போன்ற ஒரு பேட்ஸ்மேன் கூட சரியாக ரன்களை எடுக்கவில்லை. அதைப்போல, இந்த உலகக்கோப்பையில் தனி நபர் அரை சதங்கள் அதிகம் இல்லை. ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக எந்த அணியும் அரை சதம் கூட அடிக்கவில்லை. ஒரு பேட்ஸ்மேன் அரை சதம் அடித்தால் அணி அடிக்கடி வெற்றி பெறுகிறது. ரிஷப் பந்த் 42 ரன்கள் எடுத்தார், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது” எனவும் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.
ஏற்கனவே, இந்த சீசனில் விராட் கோலி இதுவரை சரியாக விளையாடவில்லை அவர் மிகவும் மோசமான பார்மில் இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கும் சூழலில் ரஷீத் லத்தீப் விராட் கோலியே ஒழுங்கா விளையாடவில்லை என கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள்…