ஒருநாள் உலகக்கோப்பையின் 33ஆவது லீக் போட்டியில் இலங்கை – இந்தியா அணிகள் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இலங்கைக்கு எதிரான போட்டியில் வென்றால், முதல் அணியாக உலகக்கோப்பை அரை இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் இந்திய அணி பெறும். அதுமட்டுமில்லாமல், இலங்கைக்கு எதிரான இந்த போட்டியில் களமிறங்குவதன் மூலம், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் இரண்டு முக்கிய சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இதனால் ரசிகர்கள் இன்றைய போட்டியை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கிய நிலையில் ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே விக்கெட்டை இழக்க, விராட் கோலி, சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதில், விராட் கோலி, ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
இன்றைய போட்டியில் விராட் கோலி 34 ரன்கள் அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பாண்டில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை இருந்த நிலையில், விராட் கோலி 34 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். ஏற்கனவே, ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை 7 முறை சச்சின் கடந்த நிலையில், தற்போது விராட் கோலி ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை 8 முறை தொட்டு சாதனை படைத்தார்.
இதனைத்தொடர்ந்து, தனது அரை சதத்தை கடந்து சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி, சதம் அடித்து மாற்று சச்சினின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ள நிலையில், விராட் கோலி 48 சதங்கள் அடித்திருந்தார். இதனால், இன்றைய போட்டியில் விராட் கோலி சதம் அடித்து சாதனை புரிவார் என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், 94 பந்துகளில் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட்டை இழந்து அதிர்ச்சி தந்தார். இதனால், தனது 49வது சதத்தை தவறவிட்ட விராட் கோலி, சச்சின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, விராட் அவுட்டானது அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் அளித்தது.
அதுமட்டுமில்லாமல், 49வது சதத்தை விராட் கோலி அடித்திருந்தால், அதிவேகமாக இந்த மைல்களை எட்டிய வீரர் என்ற சாதனையும் படைத்திருப்பார். இதனிடையே, விராட் கோலியுடன் சேர்ந்து, சுப்மன் கில்லும் தனது சதத்தை தவறவிட்டு 92 ரன்களில் விக்கெட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…