ஐபிஎல்2024 : ‘அடிச்சா அடி..இடிச்சா இடி’! கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட் கோலி!

ஐபிஎல்2024 : கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெயில் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
நேற்று சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்தார். அது என்ன சாதனை என்றால் ஒரு அணிக்காக அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை தான். நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர்கள் அடித்தார்.
அந்த போட்டியில் அவர் 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் அவர் பெங்களூர் அணிக்காக அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 241-ஆனது. எனவே, இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் ஒரு அணிக்காக விளையாடி அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். இதற்கு முன்னதாக பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் 239 சிக்ஸர்கள் அடித்து இருந்தார்.
கிறிஸ் கெயில் தான் பெங்களூர் அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை வைத்திருந்த நிலையில் தற்போது அவரை விராட் கோலி மிஞ்சியுள்ளார். அதைப்போலவே, ஐபிஎல் வரலாற்றில் மொத்தமாக அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலிலும் எம்எஸ்தோனியை விராட் கோலி பின்னுக்கு தள்ளி உள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் எம்.எஸ்.தோனி 239 சிக்ஸர்கள் அடித்து 4-வது இடத்தில் இருந்தார். நேற்றய போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர் அடித்து 241 சிக்ஸர்களை பதிவு செய்து தோனியை பின்னுக்கு தள்ளினார்.
KKR VS RCB : மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனால் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 83 * ரன்கள் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025