சிறந்த பீல்டர் விருதை வாங்கியது யார் தெரியுமா ..?

இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் கடந்த அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முடிந்தது. லீக் ஆட்டத்தில் முதல் போட்டியாக ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக்கோப்பையின் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றிய போது மைதானத்தில் இருந்த  ரோகித் சர்மா, நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் களத்தில் ஏமாற்றத்துடன் கண்களில் கண்ணீருடன் வெளியேறினர்.

சிறந்த பீல்டர் விருது:

நடந்து முடிந்த  ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியில் போட்டியின் போது சிறப்பாக பீல்டிங் செய்த வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் சிறந்த பீல்டருக்கான விருதை டிரெஸ்ஸிங் அறையில் வழங்கப்படுவதை இந்திய அணி வழக்கமாக வைத்து வந்தனர்.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் சிறப்பு பீல்டிங் செய்த இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு டிரெஸ்ஸிங் அறையில் சிறந்த பீல்ட்ருக்கான பதக்கம் வழங்கப்பட்டது. நடப்பு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியவிற்கு எதிரான முதல் போட்டியிலும் விராட் கோலி சிறந்த பீல்டருக்கான பதக்கம் வாங்கினார்.

இறுதி போட்டியிலும் ஆஸ்திரேலியவிற்கு எதிராக சிறப்பாக பில்டிங் செய்து அந்த பதக்கத்தை விராட் வென்று உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்