2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற விராட் கோலி! ஐசிசி அறிவிப்பு

2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு நான்கு வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரை செய்தது. இந்த நான்கு வீரர்களில் விராட் கோலி, முகமது ஷமி, சுப்மன் கில் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் நியூசிலாந்து அணியை சேர்ந்த டேரில் மிட்செலும் இடம்பெற்றனர்.

இந்த நிலையில் 2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியை சேர்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி வென்றுள்ளார். இந்த தகவலை ஐசிசி தனது அதிகாரபூர்வ ‘X’ பக்கத்தில் அறிவித்துள்ளது. விராட் கோலி இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார்.

IndvsEng: சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!!

மேலும் கடந்தாண்டு 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 1377 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்களும், 8 அரை சதங்களும் அடங்கும். ஐசிசி விருது வென்ற கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்