நீண்ட நாட்கள் மனைவியுடன் தங்க அனுமதி கேட்கும் விராட் கோலி …!இன்னும் முடிவு எடுக்கவில்லை…!பிசிசிஐ மறுப்பு …!
இந்திய வீரர்களுடன் அவர்களது மனைவிகள் தங்கும் காலம் நீட்டிக்கும் விவகாரம் தொடர்பாக வெளியான தகவலை பிசிசிஐ மறுத்துள்ளது.
வெளிநாட்டு தொடர்களின்போது மனைவியர் அல்லது தோழிகளை தொடர் முழுவதும் வீரர்களுடன் தங்க அனுமதிக்குமாறு விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.உச்சநீதிமன்றம் வினோத் ராய் தலைமையில் அமைத்த பிசிசிஐ நிர்வாகக்குழு, கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளை நிராகரித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு தொடர் முடியும் வரை வீரர்களுடன் அவர்களது மனைவியர் அல்லது தோழிகள் தங்குவதற்கு 2 வாரங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.ஆனால் தங்கும் காலம் நீட்டிப்பது தொடர்பாக வெளியான தகவலை பிசிசிஐ மறுத்துள்ளது.
இந்நிலையில் இந்த தகவலை பிசிசிஐ மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.மேலும் பலரது கருத்துகளை கேட்க வேண்டியுள்ளதால், முடிவெடுக்க இன்னும் சில காலம் ஆகும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.