IPL 2024 : இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணியும், பெங்களூரு அணியும் வருகிற வெள்ளிக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடருக்கு அந்தந்த அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அந்தந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்து கொண்டே வருகின்றனர்.
அதே போல இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மானான விராட் கோலி நேற்று மாலை பெங்களூரு அணியில் இணைந்துள்ளார். அவர் அணியில் இணைந்த அந்த வீடியோவை ஆர்சிபி (RCB) அணி தங்களது X தளத்தில் வெளியிட்டது. அந்த வீடியோவில் விராட் கோலி ‘ ரவுண்ட் நெக் காலரில், முதுகில் DAD என எழுதப்பட்ட வாக்கியத்தோடு உள்ள வெள்ளை கலர் T-ஷர்டை ‘ அணிந்து காரில் வந்து இறங்கினார்.
பெங்களூரு அணி பயிற்சி முகாமில் இணைந்த விராட் கோலி ஒரு 30 வினாடிகள் தனது கருத்துக்களையும் பகிர்ந்துருந்தார். அவர் அந்த வீடியோவில், “மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்திருப்பது மிகவும் நல்லதாக கருதிகிறேன். மேலும், பெங்களூரு அணிக்காக திரும்பி வந்திருப்பது உற்சாகமாக இருக்கிறது. பெங்களூரு அணி என்றாலே ஒரு தனி உணர்வு தான்.
இரண்டு மாதங்களாக நான் எந்த மீடியாவிலும் பேசவில்லை தற்போது, இந்த இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், அனைத்து பெங்களூரு ரசிகர்களும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்”, என்று பெங்களுரு அணி X தளத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் கருத்துக்களை பகிர்ந்து கூறி இருந்தார். தற்போது, பெங்களூரு அணி ரசிகர்கள் இந்த T ஷர்ட் மற்றும் அவர் பேசிய வீடியோவையும் மகிழ்ச்சியாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…