டி-20 தொடர்களில் கலந்துகொள்வதற்காக இந்தியா ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.ஆனால்,அதில் விராட் கோலி,ரோஹித் சர்மா ஆகியோர் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
இலங்கையில் வருகின்ற ஜூலை மாதம் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 தொடர் போட்டிகள் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இதுகுறித்து,பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது,”இலங்கையில் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 தொடர்களில் கலந்து கொள்வதற்காக சிறந்த வீரர்களைக் கொண்ட இந்திய அணியினர்,ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.
ஆனால்,கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டார்கள். அதற்குப்பதிலாக,அவர்கள் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கலந்துக்கொள்வார்கள்”,என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து,இலங்கையில் நடைபெறவுள்ள டி-20 தொடர்களில் விளையாட சாஹல்,ராகுல் சாஹர் அல்லது ராகுல் தேவட்யா,சேதன் சக்காரியா, தேவ்டுட் படிக்கல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர்,பிருத்வி ஷா,சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் வாய்ப்பைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…