விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு ஆண் குழந்தை..! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு
விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கும், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த 2021ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில் அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக கர்ப்பமானார், இதையடுத்து கோலி – அனுஷ்காவுக்கு கடந்த 15ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக தற்போது இருவரும் சமூகவலைதளம் மூலம் அறிவித்துள்ளனர். அந்த பதிவில், “மிதமிஞ்சிய மகிழ்ச்சி மற்றும் இதயம் நிறைந்த அன்புடன் எங்களுக்கு கடந்த 15ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.
#IPL 2024 : திரும்ப வந்துட்டேனு சொல்லு ..! கேப்டனாக டெல்லி அணிக்கு திரும்விருக்கும் ரிஷாப் பண்ட் ..!
எங்கள் மகனும், வாமிகாவின் இளைய சகோதரனுமான ’ஆகாய்’ (Akaay)-ஐ இந்த உலகிற்கு வரவேற்கிறோம். உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறோம், அன்பு மற்றும் நன்றியுடன் கோலி மற்றும் அனுஷ்கா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
— Virat Kohli (@imVkohli) February 20, 2024