நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெற்று நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்த ம்சோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தில் போராட்டம் நடந்ததால் அங்கு பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த போராட்டத்தின் எதிரொலியாக ரஞ்சி கிரிக்கெட் மற்றும் ஐ.எஸ்.எல் கால்பந்து மேலும் 19 வயதுக்குட்பட்டோருக்களுக்கான உள்ளூர் ஆட்டங்கலும் பாதிக்கப்பட்டன. தற்போது அங்கு அமைதி திரும்பி விட்டது.
இந்நிலையில் தான் இந்தியா – இலங்கை போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.இந்த சந்திப்பில் கோலியிடம் சிஏஏ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இந்த கேள்விக்கு பதிலளித்த கோலி சிஏஏ விவகாரத்தில் நான் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை.ஏனென்றால் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துக்களை சொல்ல விரும்பினால் அந்த விஷ்யம் குறித்து சாதகம் மற்றும் பாதகங்களை தெரிந்து இருக்க வேண்டும். மேலும் சிஏஏ அப்படி என்றால் என்ன என்பது குறித்து எனக்கு முழு புரிதல் வேண்டும். அவ்வாறான புரிதல் இருந்தால் மட்டுமே என்னால் கருத்துக்களை கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…