இரண்டு கோப்பை வெல்வார் விராத் கோலி!கணித்த ஜோதிடர்…பலிக்குமா?பலிக்காதா?
நாக்பூர் ஜோதிடர் ‘சர்வதேச கிரிக்கெட்டில் கோஹ்லி, 100 சதங்களுக்கும் மேல் அடிப்பார். ‘டுவென்டி-20′, ஒருநாள் உலக கோப்பை வெல்வார்,’ என, கணித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் மூன்றுவித அணிக்கு கேப்டன் கோஹ்லி, 29. சர்வதேச அரங்கில் ரன் மழை பொழிகிறார்.
இவர் குறித்து நாக்பூர் ஜோதிடர் நரேந்திர பன்டே கூறியது,
கோஹ்லியின் கிரக நிலைகள் மிகவும் வலிமையாக உள்ளன. இதனால் தான் உள்ளூரில் மட்டுமன்றி, அன்னிய மண்ணிலும் சாதிக்கிறார். வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் கோஹ்லி ரன்கள் குவிப்பார். எனது அனைத்து கணிப்புகளும் சரியாக ஒத்துவரும் பட்சத்தில், வரும் 2025க்குள் கோஹ்லி, ‘டுவென்டி-20’ மற்றும் ஒருநாள் உலக கோப்பை என இரு கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று தருவார்.
சச்சினின் ‘சதத்தில்’ சதம் என்ற சாதனையையும் கோஹ்லி தகர்த்து விடுவார். கடந்த 1990 களில் சாதாரண வீரராக இருந்த சச்சினை, மார்க் மஸ்கரானஸ், பல்வேறு விளம்பர ஒப்பந்தங்களால், கோடீஸ்வரர் ஆக்கினார். இதுபோல, இந்த ஆண்டில் சர்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட்டில் இல்லாத அளவில், கோஹ்லிக்கு பெரிய தொகைக்கான ஒப்பந்தங்கள் தேடி வரும்.
இவ்வாறு நரேந்திர பன்டே கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.