தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா;வெற்றி உற்சாகத்தில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப்-ரோஹித் ஷர்மா!
இந்திய VS தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வாரி வழங்கிய ரோஹித் ஷர்மா,வைரலாகும் வீடியோ.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி புதன்கிழமை(செப் 28) திருவனந்தபுரத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த வெற்றியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த டி 20 தொடரில் கே.எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்ததன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரத்தின் கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியத்திற்குத் திரும்பிய இந்திய அணியில் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள் உற்ச்சாகமடைந்தனர்.
மேலும், அணியின் கேப்டனான ரோஹித் சர்மா இந்த மாபெரும் வெற்றிக்கு மின் ஸ்டேடியத்தில் சூழ்ந்திருந்த தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுக்கும் வீடியோ சமூகலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Just a little something for the fans here in Thiruvananthapuram, courtesy Captain @ImRo45! ????????#TeamIndia | #INDvSA pic.twitter.com/K1dAWzqdA9
— BCCI (@BCCI) September 28, 2022