டிஎன்பிஎல் தொடரின் இன்றைய NRK vs DGD போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் டிஎன்பிஎல் தொடரில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்ய களமிறங்கிய நெல்லை அணி, ஹரிஷ் மற்றும் சோனு யாதவ் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் திண்டுக்கல் அணியில் முதலில் களமிறங்கிய விமல் குமார், சிவம் சிங் ஜோடி பொறுப்பாக விளையாடி அணிக்கு நல்லத்தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். இதில் சிவம் சிங் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்க விட்டு அரைசதம் அடித்து அசத்தினார்.
இருந்தும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து நிதானமாக விளையாடிய விமல் குமாரும் சில சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார். அதன்பின் ஆதித்யா கணேஷ் களமிறங்க, விமல் குமார் ஆட்டமிழந்தார். இவரையடுத்து, சுபோத் பதி 10 ரன்களில் வெளியேற, ஆதித்யா மற்றும் பாபா இந்திரஜித் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர்.
முடிவில், திண்டுக்கல் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக விமல் குமார் 62 ரன்களும், சிவம் சிங் 51 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு திண்டுக்கல் அணி முன்னேறியுள்ளது.
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…