இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இந்திய பேட்டிங் எதிர்பார்த்தது போல் பெரிதாக செயல்படவில்லை.இந்திய அணி கேப்டன் விராட் கோலியை தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
துவக்க வீரர் ரோகித் சர்மா இந்தக் டக் அவுட் ஆகி வெளியேற தவான் 21 ரன்களும், அம்பத்தி ராயுடு 18 ரன்களும் ,தோனி 0 ரன்களும் எடுத்தனர். அதன் பின்னர் வந்த விஜய் சங்கர் விராட் கோலிக்கு அற்புதமான கைகொடுத்தார்.அவர் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார் பின்னர் வந்த ரவிந்திர ஜடேஜா 21 ரன்கள் எடுக்க இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எப்போதும் போல் இந்திய அணியை பற்றிக்கொண்டு கரை சேர்த்தார் விராட் கோலி. அவர் 120 பந்துகளில் 116 ரன்கள் விளாசினார்.
இதன் பின்னர் 251 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்டையும் இழந்து 242 ரன்கள் மட்டுமே அடித்தது.இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கடைசி ஓவரை வீசிய தமிழக வீரர் விஜய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.
இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…