பிசிசிஐ வெளியிட்ட வீடியோ ! தோனி இடம்பெறாததால் ரசிகர்கள் குழப்பம்

பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் தோனி இடம்பெறாதது அவர்களது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது.அந்த வீடியோவில் இந்தியாவின் விளையாட்டு வீரர்கள் கொரோனாவை எதிர்த்து முகமூடி அணிய வேண்டும் என்ற யோசனையை ஊக்குவிக்கும் விதமாகவும்,வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவிடப்பட்டது.மேலும் முகமுடி அணிவது அவசியம் என்றும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டது .
ஆனால் இந்த வீடியோவில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் கோலி,முன்னாள் வீரர்கள் கங்குலி, டிராவிட், சச்சின் மற்றும் மகளீர் அணியின் மித்தாலி ராஜ், ஹர்மன் பிரித் கவுர், ஸ்மிருதி மந்தானா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.இந்த வீடியோவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ம்=தோனி இடம்பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025