இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மகளிர் உலகக் கோப்பையின் இறுதி லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
இந்தியாவின் கையில் ஆட்டம் இருந்த நிலையில், இறுதி ஓவரில் தீப்தி ஷர்மாவின் முன் கால் நோ-பால் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இது ஒரு சோகமான நாள் என்றாலும்,இந்த மோதலுக்கு முன் தகுதி நம்பிக்கையில் தொங்கிக்கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகளுக்கு இது மகிழ்ச்சியான நாளாக அமைந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அவர்களின் கடைசி லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது, இது அவர்களுக்கு ஒரு முக்கியமான புள்ளியைப் பெற்றது மற்றும் இந்தியாவை புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளியது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,இந்தியாவின் தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் வீடியோவின் ஆரம்பத்தில் பதற்றமாகவும் ஆர்வமாகவும் உள்ளனர்.இறுதியில் நான்காவது மற்றும் கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறியதால் மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து நடனமாடத் தொடங்கினர்.
வெற்றி என்பது எப்பவுமே நிரந்தரமாக யாருடனும் தங்கி விடாது.தோல்வி
என்பது ஒரு போதும் முடிவாக இருக்காது.இந்திய பெண்கள் அணி மீண்டும் மீண்டு வரும்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…