தளபதி விஜய்யாக மாறிய “டேவிட் வார்னர்”… வைரலாகும் வீடியோ..!
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜயின் முகத்தில் பேஸ்ஆப் செயலி மூலம் தனது முகத்தை வைத்து எடிட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், கிரிக்கெட் விளையாடுவது மட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி செய்து வருகிறார். உதாரணமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் தெலுங்கு பாடலான “புட்டமொம்மா” பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
அதனை தொடர்ந்து பல சூப்பரான விடியோக்களை பதிவிட்டு ரசிகர்ளை கவர்ந்து கொண்டே வருகிறார். அவர் சமீப காலமாக இந்தியா பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக ரஜினியின் எந்திரன் படத்தின் ஒரு காட்சியில் ரஜினி முகத்திற்கு பதிலாக பேஸ்ஆப் செயலி மூலம் தனது முகத்தை வைத்து எடிட் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு பிறகு பாகுபலி, கேஜி எப், போன்ற பல படங்களில் உள்ள வீடியோக்களில் தனது முகத்தை வைத்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜயின் முகத்தில் பேஸ்ஆப் செயலி மூலம் தனது முகத்தை வைத்து எடிட் செய்து மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் கலந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது, இதோ அந்த வீடியோ,
View this post on Instagram