கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 16-வது ஐபிஎல் தொடர் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மாலை 7.30 மணி அளவில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடர் இன்று தொடங்கி, 2 மாதங்கள் நடைபெறுகிறது.
இன்று தொடங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் தோனி விளையாடவில்லை என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் தோனி விளையாடுவது உறுதி என சிஎஸ்கே அணியின் சிஇஓ நேற்று தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்துள்ள தொனியின் தீவிர ரசிகை ஒருவர், அவரிடம் புகைப்படம் எடுத்தற்காக காத்திருந்தார். அப்போது, அந்த ரசிகை அவரிடம் புகைப்படம் எடுத்து கொள்வதற்காக தனது காலணிகளை கழட்டி வைத்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் என்றால், எம்எஸ் தோனி ஒரு தெய்வீக கடவுள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…