மும்பை : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். இதன் மூலம் 17 வருடங்கள் கழித்து 20 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.
மேலும், இது இந்திய அணிக்கு 2-வது உலகக்கோப்பையாகும். இறுதியில் போட்டியில் வென்று நான்கு நாட்களுக்கு பிறகு இன்று தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு, இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை அளித்து வந்தனர்.
அதன்படி இன்று காலை டெல்லியில் தரை இறங்கிய இந்திய அணி முதலில் பிரதமர் மோடியின் வீட்டிற்கு சென்று அவருடன் காலை விருந்தில் பங்குபெற்று பின் மும்பை விமானம் நிலையம் முதல் வான்கடே மைதானம் வரை மழையில் நீண்ட நேரம் காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு இடையே வெற்றி பெற்ற உலகக்கோப்பையுடன் ‘ரோடு ஷோ’ அதாவது திறந்த வெளி பேருந்தில் ரசிகர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.
அதன் பிறகு மும்பை வான்கடே மைதானத்திற்கு வந்தடைந்த இந்திய அணி அங்கு கூடி இருந்த இந்திய ரசிகர்களுக்கு கோப்பையை வழங்கும் விதமாக மைதானத்தை சுற்றி இந்திய வீரர்கள் கோப்பையுடன் வளம் வந்தனர். அங்கு நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் இந்திய ரோஹித் சர்மா நெகிழ்ச்சியுடன் பேசினார்.
அவர் பேசுகையில், “இறுதிப்போட்டி முடிந்து 4 நாட்களுக்கு பிறகு இந்தியா வந்ததற்கு சிறப்பு வாய்ந்த வரவேற்பை இந்திய மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். குறிப்பாக மும்பை வந்து இறங்கியதில் இருந்து ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்தோம். ஒவ்வொரு முறையும் உலக கோப்பை வென்று எப்போது திரும்பினாலும் மும்பை எங்களை ஏமாற்றியது கிடையாது” என்று கூறினார்.
அப்போது 2007 ம் ஆண்டு வென்ற டி20 உலக கோப்பை ஸ்பெஷலா? 2024 ஆம் ஆண்டு என்ற உலகக்கோப்பை உங்களுக்கு ஸ்பெஷலா என்று கேள்வி கேட்டபோது. அதற்கு பதில் அளித்த போது ரோகித் சர்மா 2007 ஆம் ஆண்டு தான் முதல் முறையாக இந்தியா அணி டி20 உலககோப்பை வென்றது.
அதில் தான் நாங்கள் உலகத்திற்கு எங்களுடைய திறமையை காட்டினோம். அது என்னுடைய முதல் உலகக்கோப்பை என்பதால் அது எனக்கு ஸ்பெஷல் என்று பதிலளித்தார். மேற்கொண்டு பேசிய ரோஹித் சர்மா, “இதே போல ஒவ்வொரு உலகக்கோப்பை வெற்றியும் எங்களுக்கு ஸ்பெஷல் தான்.
2011 உலகக் கோப்பை,2013 சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்தும் என் மனதில் இருந்து என்றும் நீங்காது இருக்கும். இதை போன்று கடைசி ஓவர் வீசிய ஹர்திக் பாண்டியாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர் சிறப்பாக பந்து வீசி எங்களுக்கு வெற்றியை தேடி கொடுத்தார். மேலும், சூரியகுமார் யாதவின் கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது அவருக்கும் என் பாராட்டுக்கள்.
இப்படி ஒரு அணி கிடைத்ததற்கு எனக்கு அதிர்ஷ்டம் என்று நான் கருதுகிறேன். நான் ஒன்று இரண்டு வீரர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் ஒட்டுமொத்த அணியும் கடும் பயிற்சி செய்து இந்த உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்துருகிறார்கள்” என கூறினார்.
அதை தொடர்ந்து மைதானம் முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன் அந்த வெற்றி விழா நிறைவடைந்தது. இதனால் பார்படாஸில் தொடங்கிய இந்திய அணியின் கொண்டாட்டம் தற்போது மும்பை வான்கடேவில் வந்து நிறைவடைந்துள்ளது என ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…