கில் அதிரடியால் தொடர் வெற்றியை ருசித்த இந்திய அணி ..! தொடரை 2-1 என முன்னிலை பெற்று அபாரம் ..!

ZIMvIND , 3rd T20

ZIMvIND : நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜிம்பாவே அணியுடனான டி20 போட்டி தொடரில் 3- வது போட்டியான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. கடந்த  இரண்டு போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறாமல் இருந்தனர். ஆனால், இந்த போட்டியில் இந்த இரண்டு வீரர்களும் அணியில் இடம் பெற்று இருந்தனர். 

இதன் காரணமாக பேட்டிங்கின் போது தொடக்க வீரர்களாக கில்லும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். அதில் ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய அபிஷேக் ஷர்மாவும் 10 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன்பின் ருதுராஜ் கெய்க்வாட், கில்லுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். 

இருவரும் அபாரமாக கூட்டணி அமைத்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வதற்கு காரணமாக அமைந்தனர். இதில் கில் 66 ரன்களும் மற்றும் கெய்க்வாட் 49 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து இமாலய இலக்கான 183 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே அணியினர் களமிறங்கினர். கடந்த போட்டியை போலவே இந்திய அணியின் வேகப்பந்து பவுளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மிக மோசமாக ஜிம்பாப்வே அணி தடுமாறியது.

அதன் பிறகு ஜிம்பாப்வே அணியின் டியான் மியர்ஸ் மற்றும் கிளைவ் மடண்டே நிலைத்து விளையாடினார்கள். இதனால் 100 ரன்களை கடந்து ஜிம்பாப்வே அணி விளையாடியது. இருப்பினும் அது  ஜிம்பாப்வே அணிக்கு கைகொடுக்கமல் போனது. 

இறுதியில், 20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

மேலும், ஜிம்பாப்வே அணியில் டியான் மியர்ஸ் 65 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்