வெர்ஷன் 2.O இவர் தான் ..! பத்திரானவை புகழ்ந்த லெஜெண்ட் பிரட்லீ !
ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற இரவு போட்டியில் மும்பை அணியை வீழ்த்த காரணமாக அமைந்த சென்னை அணியின் மதிஷா பத்திரனா காரணமாக அமைந்தார். அவரை பற்றி நேற்றைய போட்டி முடிந்த பிறகு பிரட்லீ பேசி இருந்தார்.
நேற்றைய நாளான ஐபிஎல் போட்டியில் இரவு ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பையை எதிர்த்து சென்னை அணி விளையாடியது. இந்த போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 207 என்ற ஸ்கோரை எட்டுவதற்கு மும்பை அணி களமிறங்கியது. பவர்ப்ளே வரை சிறப்பாக ஆடிய மும்பை அணி அதன் பின் தடுமாறியே ரன்களை சேர்த்தது. முதல் 6 ஓவர்களில் பந்து வீசாத பத்திரனா தனது முதல் ஓவரான போட்டியின் 8-வது ஓவரை வீசுவதற்கு களத்தில் வருவார்.
அப்போது வரை விக்கெட் எதுவும் இழக்காமல் இருந்த மும்பை அணி அவர் வீசிய முதல் பந்திலேயே இஷான் கிஷன் விக்கெட்டை எடுப்பார். அதன் பிறகு அவரது பந்து வீச்சில் மும்பை அணி ரன்கள் எடுப்பதில் தடுமாறியதுடன் போட்டியையும் தழுவியது. பத்திரனாவின் சிறப்பான பந்து வீச்சால் மும்பை அணியின் இஷான் கிஷன், சூர்யகுமார், திலக் வர்மா, ரோமரியோ ஷெபார்ட் போன்ற முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.
அவர் 4 ஓவருக்கு 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பான ஸ்பெல்லுடன் போட்டியை நிறைவு செய்தார். போட்டி முடிந்த பிறகு ஜியோ ஸ்போர்ட்ஸ்ஸில் நடைபெற்ற மேட்ச் சென்டரில் ஆஸ்திரேலியா வேக பந்து வீச்சாளரான பிரட்லீ அவரது சிறப்பான பந்து வீச்சை பற்றி பேசி இருந்தார். அவர் கூறுகையில், “அவர் இந்த கால தலைமுறையினருக்கு சிறந்த வீரர் ஆவார். ஸ்லிங்கர் ஆக்ஷன் அடிப்படையில் மலிங்காவிற்கு அடுத்த ஸ்லிங் வெர்ஷன் 2.0 இவர் தான்.
அவர் இந்த போட்டியில் அழகாக பந்து வீசினார். அவர் பந்து வீசுவது ஒரு பேட்ஸ்மேனுக்கு எப்படி இருக்கும் என்றால் நடுவரின் மார்புக்கு முன்னால் இருந்து 150 கிமீ வேகத்தில் ஒரு பந்து நம் இரு காலுக்கு அடியில் வருவது போல இருக்கும். இந்த ஸ்லிங் திறனால் தான் அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
மேலும், இந்த 4 விக்கெட்டுகள் அவருக்கு திருப்தி அளித்திருக்கும். அவர் ஒரு அழகான குழந்தை போல் களத்தில் இருக்கிறார். அவரது இந்த மிரட்டல் பந்து வீச்சால் அவரது அணியில் இருக்கும் மற்ற பவுலர்களும் சரி, அந்த அணியினரும் சரி நன்றாக விளையாடுகிறார்கள்”, என்று அவரது பந்து வீச்சை குறித்து பிரட்லீ பேசி இருந்தார்.