லியோவை பார்க்கணுமா? பார்முக்கு திரும்பிய வெங்கடேஷ் ஐயர்..23.75 கோடி வேலை செய்யுது!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசி விமர்சனங்களுக்கு வெங்கடேஷ் ஐயர் பதிலடி கொடுத்துள்ளார்.

venkatesh iyer ipl

கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய பேட்டிங் மீது பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்தது. ஆனால், அவர் விளையாடிய முதல் 2 போட்டிகளில் அந்த எதிர்பார்ப்புகளை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6, 3 என குறைவான ரன்களில் ஆட்டமிழந்தார்.

எனவே, சமூக வலைத்தளங்களில் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனங்களும் எழுந்தது. இவ்வளவு மோசமாக விளையாடுகிறார். அவரை எதற்கு 23.75 கோடி ரூபாய்க்கு எடுத்தீர்கள் என்பது போல கடுமையாகவே விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால், அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவர் பதிலடி கொடுத்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.எனவே, பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழக்க தொடங்கியது. பிறகு , கேப்டன் ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷிவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முறையே 38 மற்றும் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். அதன் பிறகு அணிக்கு பெரிய ஸ்கோர் வேண்டுமென்றால் வெங்கடேஷ் ஐயர் விளையாடினாள் தான் வரும் என்ற சூழல் ஏற்பட்டது.

அவரும் சூழலுக்கு ஏற்றபடி,  29 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 60 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். அவருடைய அந்த அதிரடி ஆட்டம் தான் அணியின் ஸ்கோரை நன்றாக உயர்த்த உதவி செய்தது. இந்த அதிரடியான இன்னிங்ஸ் மூலம் வெங்கடேஷ் ஐயர் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். மேலும், இந்த போட்டியில் 20 ஓவரில் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய SRH  16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன் சொந்த மண்ணில் 80 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்