“அதிக சம்பளம் வாங்கினால் அதிக ரன்கள் அடிக்க வேண்டுமென அர்த்தமல்ல” – விமர்சனங்களுக்கு வெங்கடேஷ் ஐயர் பதிலடி.!
நான் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்பதால், ஒவ்வொரு போட்டியிலும் ரன் அடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று KKR அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.

கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. டாஸ் வென்று ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவில், ரகுவன்ஷி (50), வெங்கடேஷ் ஐயர்(60) அரைசதம் விளாசி அசத்தினர்.
பின்னர், முதலில் பேட்டிங் செய்த KKR அணியில், வெங்கடேஷ் ஐயர் (60), ரகுவன்ஷி (50) அரைசதம் விளாச, அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 200 ரன்கள் குவித்த, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன் சொந்த மண்ணில் 80 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
குறிப்பாக சொல்லல வேண்டும் என்றால் நேற்றைய ஆட்டத்தில், ஏலத்தில் இவருக்கு போய், ரூ.23.75 கோடியா என விமர்சித்து, 3 மேட்ச்களில் கிண்டலடித்து வந்தவர்களுக்கு வெங்கடேஷ் ஐயர் தகுந்த பதிலடி கொடுத்துவிட்டார். 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் விளாசி, சட்டென ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. ஆனால், அவர் விளையாடிய முதல் 2 போட்டிகளில் அந்த எதிர்பார்ப்புகளை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை, ஏனென்றால், சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6, 3 என குறைவான ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனவே, வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு எடுத்தீர்கள் என்று அவருடைய பேட்டிங் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்தது. இதற்கு போட்டி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேஷ் ஐயர்,
“ஐபிஎல் தொடங்கியதும்.. ஒரு வீரருக்கு ரூ. 20 லட்சத்துக்கு விற்கப்பட்டதா? இல்லையெனில் ரூ. 20 கோடிக்கு விற்கப்பட்டதா? அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பொய் சொல்ல மாட்டேன், கொஞ்சம் அழுத்தம் இருக்கு. நீங்க ரொம்ப பேசுறீங்க,” என்று நக்கலாகக் கூறினார்.
ஆனால் அதிக சம்பளம் வாங்கும் வீரராக இருப்பதால் நான் ஒவ்வொரு போட்டியிலும் ரன்கள் எடுக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நான் அணிக்காக எப்படி வெற்றி பெறுகிறேன், என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதுதான் முக்கியம். மேலும், நான் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்பதால், ஒவ்வொரு போட்டியிலும் ரன் அடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அணியின் நலன்களுக்கு ஏற்ப எனக்கு ஒரு தாக்கம் இருந்ததா? இல்லையா? அதுதான் முக்கியம்.
நான் எவ்வளவு பணம் பெறுகிறேன் அல்லது எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்பதுதான் அழுத்தம் அல்ல. அது எனக்கு ஒருபோதும் அழுத்தம் கொடுத்ததில்லை. நான் அணியின் வீரர், அணியின் வெற்றிக்கு பங்களிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.