டாப்லே, பட்டிதருக்கு பதிலாக வேண் பர்னெல் மற்றும் வைஷக் விஜயகுமார் ஆர்.சி.பி அணியில் சேர்ப்பு.!
பெங்களூரு அணியில் காயம் காரணமாக விலகிய டாப்லே, பட்டிதருக்கு பதிலாக வெய்ன் பார்னெல் மற்றும் வைஷக் விஜயகுமார் சேர்ப்பு.
நடப்பு ஐபிஎல் தொடரில் காயமடைந்த வீரர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் முக்கிய வீரர்கள் பலரும் இந்த ஐபிஎல் தொடரில் துரதிர்ஷ்டவசமாக காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறி வருகின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக விளையாடும் போது ரீஸ் டாப்லே பீல்டிங்கில் காயமடைந்தார்.
தற்போது அவர் தொடரில் பங்கேற்கமாட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்காக சொந்த நாடு திரும்புகிறார். முன்னதாக பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த ரஜத் பட்டிதாரும் காயம் காரணமாக விலகியுள்ளதால் இருவருக்கும் பதிலாக மாற்று வீரர்களை ஆர்.சி.பி அணி புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரான வெய்ன் பார்னெல்(75 லட்சம்) மற்றும் வைஷக் விஜயகுமார்(20 லட்சம்) ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.