இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார். அதனை வாழ்த்தும் விதமாக ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் கொல்கத்தா அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. மூன்றாம் டெஸ்ட் போட்டி, வரும் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
டெஸ்ட் தொடருக்கு பின் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், மார்ச் 12 ஆம் தேதி முதல் அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார். அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் அணியில் இடம் பெற்றுள்ளார்.
வருண் சக்ரவர்த்திக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் கொல்கத்தா அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “வாத்தி கம்மிங்” பாடலுடன் வருண் சக்ரவர்த்தி உட்பட வீரர்கள் ஆடும் விடியோவை பதிவிட்டுள்ளது. தற்பொழுது இந்த வீடியோ, வைரலாகி வருகிறது.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஹார்திக், ரிஷாப் பந்த், இஷான் கிஷன், சாஹல், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவாதியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர்.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…